அட அட.. மகனை கட்டியணைத்து பாதுகாப்பாக பராமரிக்கும் காஜல்..! வைரலாகும் கியூட் போட்டோ..!!

அட அட.. மகனை கட்டியணைத்து பாதுகாப்பாக பராமரிக்கும் காஜல்..! வைரலாகும் கியூட் போட்டோ..!!


Kajal Aggarwal with her son

நடிகர் பரத்தின் பழனி படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை காஜல் அகர்வால். அதனைத்தொடர்ந்து, விஜய், சூர்யா, கார்த்திக், தனுஷ் உட்பட பலருடன் நடித்துள்ளார். 

தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ள காஜல் அகர்வால், கடந்த 2020-ல் கெளதம் கீட்ஸிலுவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும் சில படங்களில் காஜல் நடித்து வந்தார்.

இதற்கிடையே காஜல் அகர்வால் கர்ப்பமாகவே, தான் நடிப்பதாக ஒப்புக்கொண்ட படங்களில் இருந்து விலகிக்கொண்டார். கடந்த சில மாதத்திற்கு முன்பு தம்பதிகளுக்கு அழகிய குழந்தையும் பிறந்தது. அக்குழந்தைக்கு நெய்ல் கீட்ஸிலு என்று பெயரிட்டுள்ளனர். 

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.