ஜெயிலர் படத்தின் கதை இதுதான்; வெளியானது அட்டகாசமான தகவல்.. கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்.!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், சிவ ராஜ்குமார், திரிஷா கிருஷ்ணன் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், அனிரூத் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் படம் உருவாகியுள்ளது.
படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். படத்தின் டீசர், 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படம் 10 ஆகஸ்ட் 2023 அன்று வெளியாகிறது.
இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் 2 மணிநேரம் 30 நிமிடம் ஓடும் திரைப்படம் என்றும், சிறையில் இருக்கும் குற்றச்செயல் புரிந்த நபரை மீட்க எதிராளிகள் வருவதும், அதனை நாயகன் எப்படி எதிர்கொள்கிறார் என்பது தான் கதை என்ற தகவல் வெளியாகியுள்ளது.