AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
என்னது? நடிகை இவானவின் உண்மையான பெயர் இதுவா? அவரே கூறிய தகவல்.
தமிழ் சினிமா ரசிகர்களிடம் லவ் டுடே படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகை இவானா தற்போது தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் பிரபலமாகி வருகிறார். எளிமையான கவர்ச்சி மற்றும் உணர்ச்சி மிகுந்த நடிப்பால் இளம் நடிகைகளில் முன்னணியில் திகழ்கிறார்.
கேரளாவில் தொடங்கிய சினிமா பயணம் கேரள மாநிலத்தின் சாங்கனாச்சேரி பகுதியைச் சேர்ந்த இவானா, பள்ளிக் காலத்திலேயே நடிப்பில் ஆர்வம் காட்டி, மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நடிகையாக அறிமுகமானார். மாஸ்டர்ஸ், ராணி பத்மினி, அனுராக கரிக்கின் வெல்லம் போன்ற படங்களில் சிறப்பாக நடித்தார்.
தமிழ் ரசிகர்களுக்கு அவர் அறிமுகமான படம் இயக்குநர் பாலாவின் நாச்சியார். அந்த படத்தில் அவரது இயல்பான நடிப்பு பாராட்டைப் பெற்றது. அதன் பின்னர் ஹீரோ மற்றும் லவ் டுடே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் தனி இடத்தை பிடித்தார்.
இதையும் படிங்க: என்ன ஒரு போஸ்...கிளாமர் உடையில் கிக் ஏத்தும் டிராகன் பட நடிகை..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்...
இவானா தற்போது பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். லவ் டுடே பட வெற்றி அவரது புகழை அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களிலும் இவரது ரசிகர் பட்டாளம் வேகமாக உயர்ந்து வருகிறது.
சினிமா ரசிகர்களுக்கு இவானா என்ற பெயரால் பிரபலமான இவரது உண்மையான பெயர் அலீனா ஷாஜி. சமீபத்திய பேட்டி ஒன்றில் இவானா இதை உறுதிபட்டுதியுள்ளார்.
இதையும் படிங்க: டிராகன் நடிகை கயாடு லோஹர் கிராமத்து பெண்ணாக மாறி என்ன செய்கிறார் பாருங்க! அடுத்து கொடுக்கிற ரியாக்ஷன் வேற லெவல்! வைரலாகும் வீடியோ...