ஆத்தாடி... நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் இணைந்த சில மணி நேரத்திலேயே இவ்வளவு ஃபாலோயர்ஸ்களா.!!

ஆத்தாடி... நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் இணைந்த சில மணி நேரத்திலேயே இவ்வளவு ஃபாலோயர்ஸ்களா.!!


instagram followers increased to actress jothika

இன்ஸ்டாகிராமில் இணைந்த முதல் நாளிலேயே நடிகை ஜோதிகாவை 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோயர்ஸ் பின்தொடர்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. நடிகர் சூர்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்கள் இருவரும் இணைந்து ஜோடியாக ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளனர். 

ஜோதிகா திருமணத்திற்குப் பின்பும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை ஜோதிகா நேற்று தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். இதனை சூர்யாவும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பெருமையுடன் பகிர்ந்திருக்கிறார்.

இன்ஸ்டாவில் தேசியக்கொடியுடன் ஜோதிகா இமயமலையில் ட்ரெக்கிங் செல்லும்  புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். இரண்டு லட்சம் பேருக்குமேல் லைக்ஸ்களை குவித்துள்ளனர். ஜோதிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்து சில மணி நேரங்கள்தான் ஆகிறது அதற்குள். 1.3 மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் பின்தொடர்கிறார்கள்.