பிக்பாஸ் நிகழ்ச்சியில் இது மட்டும் தான் இருக்கிறது.! கடுமையாக விமர்சித்த பிரபல நடிகை.!
இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வழக்கு போட்டவர்களை வச்சு செய்த இளையராஜா.! என்ன கூறி கலாய்த்தார் தெரியுமா?
இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வழக்கு போட்டவர்களை வச்சு செய்த இளையராஜா.! என்ன கூறி கலாய்த்தார் தெரியுமா?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில், இசைஞானி இளையராஜாவின் 75 பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பாராட்டு விழாவும், பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் அவை நேற்றும், நேற்றைக்கு முதல் நாளும் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது .
மேலும் இரு நாட்கள் நடந்த நிகழ்ச்சியை முதல் நாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு ஆடி,பாடி விழாவை சிறப்பித்தனர். மேலும் பல வெற்றிப்படங்களில் நடித்த பிரபலங்களும், இசையமைப்பாளர்களும் இளையராஜாவின் இசைப் பயணம் குறித்து தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் நிகழ்ச்சி நிறைவடைய நள்ளிரவு ஆகியும் அரங்கில் கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளையராஜா ரசிகர்கள் நகராமல் நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர். இந்நிலையில் நிகழ்ச்சியின் இறுதியாக இளையராஜா தென்பாண்டி சீமையிலே பாடலை பாடி முடித்து ரசிகர்களிடம் பேசினார்.
அப்பொழுது அவர் கூறியதாவது , இந்த விழா இவ்வளவு பெரிய விழாவாக நடைபெறும் என நான் சிறிதும் நினைக்கவில்லை.இந்த விழாவை சிறப்பாக நடத்தியதயாரிப்பாளர் சங்கத்துக்கும் அதன் தலைவர் விஷாலுக்கும் எனது பாராட்டுகள். மேலும் இந்த நிகழ்ச்சி நடக்கக் கூடாதுனு நினைச்சவங்களுக்கும் ரொம்ப நன்றி.
இந்திய நீதிமன்ற சரித்திரத்தில் ஒரு தனி மனிதனுக்கு கோர்ட்டு சர்டிஃபிக்கேட் கொடுத்துருக்குனா அதுக்கு காரணம் இந்த நிகழ்ச்சியை எதிர்த்து வழக்கு போட்டவங்க மட்டும்தான். விஷால் மற்றும் அவரின் அணி வாக்குகள் வென்று சங்கத்தின் வேலைகளைச் செய்தால், சிலர் வெளியிலிருந்து இந்தமாதிரி செயல்களால் சங்கத்துக்குப் பாராட்டுகளை வாங்கித் தருகிறார்கள்.
அதாவது சிலர் பாட்டுக்கு மியூசிக் போட்டு பெரிய ஆள் ஆவாங்க, சிலர் பாடலில் இருக்குற குறைய கண்டுபுடிச்சு காட்டி பெரிய ஆள் ஆவாங்க. அந்தமாதிரிதான் அவங்க இந்தமாதிரி நிறைய கேஸ் போட்டு கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் நடையோ நடைனு நடக்கணும் நான் வாழ்த்துறேன் என்று கிண்டல் செய்து பேசினார். அப்போது குழுமியிருந்த ரசிகர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
அதாவது இளையராஜா ௭௫ நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் தயாரிப்பாளர்கள் சிலரால் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது அவர்களை கிண்டல் செய்தே இளையராஜா அவ்வாறு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.