அடேங்கப்பா! 40 வருஷமா இப்படியொரு நட்பா! சாவாலும் பிரிக்கமுடியலையே!!

அடேங்கப்பா! 40 வருஷமா இப்படியொரு நட்பா! சாவாலும் பிரிக்கமுடியலையே!!


hindu-muslim-friends-dead-in-same-day

அரியலூர் ஜெயங்கொண்டம் ஜூபிலி ரோட்டில் அமைந்துள்ள அல்லா கோவிலின் அருகே வசித்து வந்தவர் மகாலிங்கம். அவர் அருகிலிருந்த காளியம்மன் கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்துள்ளார். மேலும் சிறு டீக்கடையையும் நடத்தி வருகிறார்.

இவரது வீட்டின் எதிர்புறத்தில் வசித்து வந்தவர் ஜெயிலாபுதின். இவர் ரைஸ்மில் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அவரும் மகாலிங்கமும் 40 வருடங்களுக்கு மேலாக நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் எந்த விழாவாக இருந்தாலும், பண்டிகையாக இருந்தாலும் இரு குடும்பத்தினரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடி வந்துள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் மகாலிங்கத்தை திடீரென உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அடுத்த சிறிது நேரத்திலேயே ஜெயிலாபுதீனுக்கும் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இருவரும் எதிரெதிர் படுக்கையில் இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

dead
இந்நிலையில், ஜெயிலாபுதீன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அவர் இறந்த அரை மணி நேரத்திலேயே மகாலிங்கமும் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து இரு குடும்பத்தினரும் கூறுகையில் எங்கள் தாத்தா காலம் தொடங்கி தந்தை வரை இரு குடும்பத்தினரும் ஒன்றாக வாழ்ந்து வந்தோம். மேலும் இனி வரும் சந்ததியினரும் ஒற்றுமையாக இருந்து அனைவருக்கும் முன்னுதாரணமாக இருப்போம் என கூறியுள்ளனர்.