அச்சச்சோ.. பிக்பாஸில் சக போட்டியாளரை முகத்தில் கடுமையாக குத்திய நடிகை.. போட்டிக்காக இப்படியா?..!



HINDHI BIGGBOSS CONTROVERSY

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியானது நடிகர் சல்மான்கானால் தொகுத்து வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி வடஇந்தியாவில் பலராலும் பார்க்கப்படுகிறது. தற்போது இந்நிகழ்ச்சி சர்ச்சையிலும் சிக்கிவரும் நிலையில், 10 பெண்களுக்கு பாலியல்தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய இயக்குனர் சஜித்கான் போட்டியாளராக சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி நடிகை மந்தனா கரிமி திரைத்துறையை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார். 

மேலும் சஜித்கானை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்க டெல்லி மகளிர் ஆணையத்திற்கு கடிதமும் எழுதினார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் சமீபத்தில் அடிதடி போன்றவை நடந்து வரும் நிலையில், நடிகர் அர்ச்சனா கௌதமுக்கும், மற்றொரு போட்டியாளரான சிவ தாக்கரேவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

BIGG BOSS HINDI

இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறவே, ஷிவ் தாக்கரை, அர்ச்சனா கவுதம் முகத்தில் கையால் கடுமையாக குத்தியிருக்கிறார். இதனால் அவருக்கு காயமேற்பட்டு அர்ச்சனா கெளதம் பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.