HanuMan Trailer: மீண்டும் உயிர்பெற்ற ஸ்ரீ ராமபக்தர்: அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் வெளியானது ஹனுமான் பட டிரைலர்..!



Hanuman Official Trailer 2024 

 

பிரசாந்த் வர்மா இயக்கத்தில், ப்ரைம் ஷோ என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில், தேஜா சஜ்ஜா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ஹனுமான். 

இப்படத்திற்கு கவுரா ஹரி, அனுதீப் தேவ், கிருஷ்ணா சௌரப் ஆகியோர் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு இருக்கின்றனர். படத்தில் தேஜா, மிருதா ஐயர், வரலக்ஷ்மி சரத் குமார், வினய் ராய், ராஜ் தீபக் ஷெட்டி, வெண்ணிலா கிஷோர், கெட்அப் ஸ்ரீனு, சத்யா உட்பட பலரும் நடித்துள்ளனர். 

ஹனுமான் திரைப்படம் இயக்குனர் பிரசாந்த் வர்மாவின் யூனிவர்சில் உருவாகியுள்ளது. இராமாயணத்தின்படி ஸ்ரீ இராமரின் பக்தனாக வாழ்ந்து, மரணம் இல்லாத மனிதராக வலம்வரும் ஹனுமானின் கதையை கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. 

Hanuman

படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், அதன்படி நிகழ்காலத்தில் தொழில்நுட்ப சக்தி கொண்ட வில்லன்களுக்கும், அவர்கள் அடைய நினைக்கும் மலைவாழ் கிராம மக்களின் சக்திக்கும் இடையே நடக்கும் சண்டையில் யாருக்கு வெற்றி? என்ன நடந்தது? என்பது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், ஸ்பேனிஷ், கொரியா, ஜப்பானியம், சீன மொழிகளிலும் வெளியாகிறது. படம் 12 ஜனவரி 2024 அன்று திரையரங்கில் வெளியாகிறது. படத்தின் அசத்தல் டிரைலர் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.