சினிமா

வெறும் எலும்பும் தோலும்தான் இருக்கு.. பார்க்கவே பரிதாபமாக இருக்கும் ஹன்சிகா.. வைரல் புகைப்படம்..

Summary:

உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ள நடிகை ஹன்ஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ள நடிகை ஹன்ஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஹன்ஷிகா. விஜய், சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி என தமிழ் சினிமாவில் பெரும்பாலான பிரபல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர் தற்போது சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்துவருகிறார்.

கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு 100 என்ற தமிழ் படத்தில் நடித்த இவர் அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. தற்போது இவர் நடித்துள்ள மஹா திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் திரையில் தோன்றி சில ஆண்டுகள் ஆகிவிட்டாலும், தமிழ் ரசிகர்கள் இன்றுவரை ஹன்ஷிகாவை மறக்கவில்லை.

அதற்கு காரணம் அவரது அழகான நடிப்பு ஒரு காரணம் என்றாலும், அவரது கொளுக்கு மொலுக்கு என இருக்கும் அவரது தோற்றமும் ஒரு காரணம். குட்டி குஷ்பூ என பெயர் எடுத்த ஹன்ஷிகா இப்போ என்ன நினைத்தாரோ தெரியவில்லை உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஹன்ஷிகா, அந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு எலும்பும் தோலுமாய் மிக மிக ஒல்லியாக மாறியுள்ளார் ஹன்ஷிகா. புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள், ஹன்ஷிகாவா இது என கேட்கும் நிலையில் மிகவும் பரிதாபமாக உள்ளார் அம்மணி. இதோ! அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.


Advertisement