தன்னுடைய பேரனையும் திரையுலகில் களமிறக்கிய நடிகர்...!
தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள் ஆனால் அதில் ஒருசிலர் மட்டும் தான் ஆழமாக நம் நினைவில் இருப்பவர்கள். அப்படிப்பட்ட நல்ல திறமையுள்ள காமெடி நடிகர் தான் நம்ம தேங்காய் ஸ்ரீவாசன் அவர்கள்... இவர் மிகவும் திறமை வாய்ந்த காமெடி நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்...
அவர் தில்லுமுல்லு போன்ற அருமையான படங்களில் நடித்து நம் மனதை கவர்ந்தவர். 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் 1987ல் உடல்நல குறைவால் காலமானார் என்பது தெரிந்த விடயமே... இவருக்கு ஒரு பேரன் மட்டும் ஒரு பேத்தி இருக்கிறார்கள்...
இவரின் பேத்தி ஸ்ருதிகா ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஸ்ருதிகா தித்திக்குதே, ஆல்பம் மற்றும் ஸ்ரீ போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் தற்போது நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்களின் பேரனும் படத்தில் நடித்துக்கொண்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது..
தற்போது அவரது பேரன் ஆதித்யாவும் சூப்பர் ஸ்டார் நடிக்கும் 2.0 மற்றும் பேட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது...