சினிமா

ரகசியமாக திருமணம் செய்துகொண்ட நடிகர் யோகிபாபுவிற்கு கிடைத்த அசத்தலான பரிசு! என்ன தெரியுமா? புகைப்படம் இதோ!

Summary:

fans gave gift to yogibabu

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்களில் தற்போது அதிகமான ரசிகர்களை கொண்டு விளங்குபவர் யோகி பாபு. இவர் அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் தனது உடல்வாகுவை சிறிதும் பொருட்படுத்தாத  யோகிபாபு எந்தவொரு கதாபாத்திரத்தையும் ஏற்று சிறப்பாக நடிக்கக்கூடியவர்.

பிரபல ஹீரோக்களுடன் காமெடி நடிகராகவும்,  நடிகைகளை காதலிக்கும் மன்மதனாகவும், குழந்தைகளுக்கு பிடித்தமான நகைச்சுவை வேடங்களையும் ஏற்று நடித்துவந்த யோகிபாபுவிற்கு எப்பொழுது திருமணம் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் அவர்களது குலதெய்வ கோவிலில் மஞ்சுபார்கவி என்ற பெண்ணுடன் யோகிபாபுவிற்கு திருமணம் நடைபெற்றது.

முன்னறிவிப்பின்றி நடைபெற்ற இந்த திடீர் திருமணம் குறித்து ரசிகர்கள் பலரும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கினர். இந்நிலையில் நடிகர் யோகிபாபு திருமண வரவேற்பு விழா மார்ச் மாதம் நடைபெறும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் அவரது திருமணத்தை பெருமளவில் எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்கள் திருமண போட்டோவை பிரேம் செய்து அவருக்கு பரிசாக கொடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தை யோகிபாபு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Advertisement