மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்... சோகத்தில் திரையுலகினர்!!

மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்... சோகத்தில் திரையுலகினர்!!


Famous singer Vani jayaram died today

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹந்தி போன்ற மொத்தம் 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய மூத்த முன்னணி பாடகியாக வலம் வந்தவர் வாணி ஜெயராம். 78 வயதாகும் இவர் முதலில் பாலிவுட்டில் மட்டும் பாடி வந்த நிலையில் தனது மயக்கும் குரலால் தமிழ், தெலுங்கு என மற்ற மொழிகளில் பாடும் வாய்ப்பினை பெற்றார்.

இவர் இதுவரை மூன்று தேசிய விருதினையும், உயரிய விருதான பத்ம பூசன் விருதினையும் பெற்றுள்ளார். இவர் தமிழில் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், சக்கரவர்த்தி மற்றும் இளையராஜா போன்ற முன்னணி பாடகர்களுடன் சேர்ந்து பாடிய பாடல்கள் அனைத்தும் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறது. 

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நெற்றியில் காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வாணி ஜெயராம் இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.