அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் வரிகளில்.. செம்ம ரணகளத்துடன் வெளியான செல்லம்மா பாடல்! கலக்கலான வீடியோ இதோ!



doctor-movie-single-track-song-viral

நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோ திரைப்படத்தை தொடர்ந்து தற்போது டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன்  இயக்கி வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் வில்லனாக வினய் நடிக்கிறார். 

சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத்  இசையமைத்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டிய நிலையில் கொரோனா பரவல் காரணமாக தற்போது படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது.  இந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

doctor

இந்நிலையில் டாக்டர் திரைப்படத்தின் முதல் சிங்கிளான செல்லமே பாடல் நேற்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.