கஞ்சாவுக்கு அடிமை! 42 வருடம் கழித்து இயக்குனர் பாக்யராஜ் பற்றி வெளியான உண்மை! அதிர்ச்சியில் ரசிகர்கள்.
தமிழ் சினிமாவில் மிகப் பெரிய இயக்குனர், இயக்குனர் சிகரம் என பல்வேறு புகழ்பெற்றவர் இயக்குனர், நடிகர் கே. பாக்யராஜ். பல்வேறு இயக்குனர்களும், நடிகர்களும் முன் உதாரணமாக திகழ்ந்து வருபவர்.
16 வயதினிலே திரைப்படம் மூலம் துணை இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கே பாக்யராஜ். மேலும் இவர் நடித்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் சென்னை வடபழனியில் நடந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய நடிகர் கே பாக்யராஜ் தான் கஞ்சாவுக்கு அடிமையாக இருந்ததாகவும், போதை மரத்தில் தனக்கு ஞானம் கிடைத்ததாகவும் 42 வருடங்கள் கழித்து நடந்த உண்மையை கூறியுள்ளார் கே பாக்யராஜ்.
சமீபகாலமாக கஞ்சா போதைக்கு அடிமையாகி அதனால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து வருவதாகவும், அதிலிருந்து விடுபட்டால் தான் இளைஞர்கள் வாழ்வில் முன்னேற முடியும் என்றும், அதற்கு நானே உதாரணம் எனவும் கே பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
42 வருடங்கள் கழித்து நடந்த உண்மையை கே பாக்யராஜ் கூறியது, திரையுலக பிரபலங்கள் உட்பட அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.