அடேங்கப்பா.. வேற லெவல்! தளபதி விஜய்யை சந்தித்த தல தோனி! ஏன் இந்த திடீர் சந்திப்பு பார்த்தீங்களா!!

அடேங்கப்பா.. வேற லெவல்! தளபதி விஜய்யை சந்தித்த தல தோனி! ஏன் இந்த திடீர் சந்திப்பு பார்த்தீங்களா!!


Dhoni meet vijay photo viral

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக தளபதியாக வலம் வருபவர் விஜய். அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் கொரோனோவால் நிறுத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கவுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணி மோதுகிறது. இதற்கிடையில் இதன் பயிற்சிக்காகவும், விளம்பரம் ஒன்றில் நடிப்பதற்காகவும் கிரிக்கெட் வீரர் தோனி சென்னை வந்துள்ளார்.

தோனியின் விளம்பர சூட்டிங்கும் கோகுலம் ஸ்டுடியோவிலேயே நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் தல தோனி மற்றும் தளபதி விஜய் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துள்ளனர். அவர்கள் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.