திரைப்பட பாடகியின் பேரில் ஆன்லைன் கேம் மோசடி; மக்களே நம்பாதீங்க.. உஷார்.!

இந்திய திரையுலகின் முன்னணி திரைப்பட பாடகி ஷ்ரேயா கோஷல். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில், சுமார் 1000 க்கும் மேற்பட்ட பாடல்களை வர பாடி இருக்கிறார்.
இதனிடையே, பாடகி ஷ்ரேயா கோஷலின் பெயரில் மர்ம ஆசாமிகள் விசமத்தனமான மோசடியில் ஈடுபடுவது தெரியவந்தது.
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஸ்ரேயா கோஷல் ஆன்லைன் கேம் ஒன்றை விளம்பரப்படுத்தி பேசுவது போல காட்சிகள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: நடிகர் சிவாஜி கணேசனின் வீடு ஜப்தி செய்ய நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.!
இந்த வீடியோவில் நடிகை பேசுவதை போல மாற்றி, அதனை மோசடி செயலுக்காக கும்பல் பகிர்ந்து வருகிறது. இதனால் மேற்படி தகவலை நம்ப வேண்டாம் என காவல்துறை சார்பில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இயக்குனரின் பெயரைச்சொல்லி நடிகையிடம் அத்துமீறல்.. இளவயதில் நடந்த மோசமான அனுபவம்.. நடிகை ஓபன் டாக்.!