வயது குறைவான நபரைத்தான் திருமணம் செய்வேன்.!! 35 வயதாகும் கவர்ச்சி நடிகை அறிவிப்பு..

வயது குறைவான நபரைத்தான் திருமணம் செய்வேன்.!! 35 வயதாகும் கவர்ச்சி நடிகை அறிவிப்பு..


Comali movie pajji kadai aunty talks about marriage

தன்னைவிட வயதில் குறைவான பையனைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என கூறியுள்ளார் நடிகை நடிகை கவிதா ராதேஷ்யம்.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை கவிதா ராதேஷ்யம். கோமாளி படத்தில் பஜ்ஜி கடை ஆண்டியாக, கவர்ச்சியான வேடத்தில் நடித்திருந்தார். மேலும் தனது முதல் தமிழ் படத்திலையே தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமும் ஆகிவிட்டார் நடிகை கவிதா ராதேஷ்யம்.

comali movie

இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கிளாமர் புகைப்படத்தை பதிவு செய்திருந்த அவர், "எனக்கு யாருடனும் எந்த விதமான ரிலேஷன்ஷிப் இல்லை. எனக்கு நிச்சயதார்த்தமோ, திருமணமோ ஆகவில்லை. நான் இன்னும் 5 வருடங்கள் கழித்து தான் திருமணம் செய்து கொள்வேன். 

அதேநேரம் கண்டிப்பாக என்னை விட மிகவும் வயது குறைவானவரைதான் திருமணம் செய்து கொள்வேன். எனவே என்னை பற்றி பரப்பும் வதந்தியை நிறுத்துங்கள்" என்று பதிவு செய்துள்ளார்.

தற்போது இவருக்கு 35 வயது ஆகும் நிலையில், இன்னும் 5 வருடம் என்றால் அம்மணி தனது 40 வது வயதில்தான் திருமணம் செய்துகொள்வார் போல.

comali movie