ஏன் இவ்வளவு ஆவேசம்.! கொந்தளித்துப் போய் அடுக்கடுக்காக சேரன் வெளியிட்ட பதிவு.!



Cheran tweet harshly for misbehaviour netisans

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கடந்த 105 நாட்கள் விறுவிறுப்பாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களும் ஒருவராக கலந்துகொண்டவர் தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் சேரன். 

 பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அவர் வயது ஒரு தடையில்லை என்பதற்கேற்ப அங்கிருந்த இளைஞர்களுக்கு இணையாக போட்டிகளில் ஈடுபட்டு வந்தார். மேலும் சேரன் பிக்பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளர் என்பதையும் தாண்டி நல்ல அப்பாவாகவும் , அண்ணனாகவும், நண்பனாகவும் விளங்கினார். மேலும் அனைவருக்கும் அறிவுரை வழங்கி நல்வழிப்படுத்தியும் வந்தார். 
bigboss

இந்நிலையில் தற்போது சேரன் சமூக வலைதளங்களில் கட்சித் தலைவர்களை மோசமாக விமர்சனம் செய்பவர்களையும், நடிகர்களை தரம் தாழ்த்தி பேசுபவர்களுக்கும் அறிவுரை வழங்கும்படி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆவேசத்துடன் பதிவுகளை அடுக்கடுக்காக வெளியிட்டு வருகிறார்.