இப்படியொரு அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கும்..நடிகர் விவேக்கின் இசையில் மூழ்கிய பிரபல நடிகர்! அவரே பகிர்ந்த அரிய வீடியோ! வேதனையில் கண்கலங்கும் ரசிகர்கள்!!



cellmurugan-post-video-with-vivek

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான விவேக் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி உயிரிழந்தார். இது ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பலரும் அவரது அரிய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விவேக்கின் மறைவால்  நடிகரும், அவரது நெருங்கிய நண்பருமான செல்முருகன் மீளாத்துயரில் மூழ்கியுள்ளார். எப்பொழுதும் நடிகர் விவேக்குடனே காணப்படும் செல்முருகன் இனி எனக்கு யார் துணை? வேறு யாரும் இல்லையே என வேதனையுடன் வெளியிட்ட பதிவு அனைவரையும் கண்கலங்க வைத்தது.

இந்த நிலையில் செல் முருகன் நேற்று நள்ளிரவில் விவேக்கின் நினைவுகளை பகிரும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் விவேக் இசைக்கருவியை வாசிக்க அதனை செல்முருகன் ரசித்தவாறு வீடியோ எடுத்துள்ளார். அதனை இணையத்தில் பகிர்ந்த அவர் வாழ்கையைல ரீ -வைண்டு பட்டன் இருந்தா நல்லா இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் வேதனையுடன் கண்கலங்கியுள்ளனர். மேலும் விவேக் இசைக்கருவி வாசிக்க, அதை ரசிக்கும் அதிர்ஷ்டம் எத்தனை பேருக்கு கிடைக்கும் என கூறி வருகின்றனர்.