உளவியல் பரிசோதனை செய்க.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு எதிராக மனுத்தாக்கல்.! ஏன்? என்ன காரணம்?case-filed-against-logesh-ganagaraj-for-leo-movie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்த திரைப்படம் லியோ. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், ரஜினியின் 171 வது படத்தை இயக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜுக்கு எதிராக மதுரையை சேர்ந்த ராஜமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர், லியோ படத்தில் பெரும்பாலான காட்சிகள் வன்முறையை ஆதரிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் ஆயுத கலாச்சாரமும், மதம் தொடர்பான சின்னங்களை பயன்படுத்தி முரண்பாடான கருத்துகளும் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் போதைப்பொருள் பயன்பாடு, பெண்கள், குழந்தைகளை கொல்ல வேண்டும் என்ற கருத்தை பரப்புதல் போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

Leo

அதுமட்டுமின்றி கலவரம், சட்டவிரோதமான செயல்கள், போதை பொருட்கள் வியாபாரம், துப்பாக்கிகளை பயன்படுத்துதல், காவல்துறை உதவியுடன் எல்லா குற்றங்களையும் செய்ய முடியும் என்ற சமூகவிரோத கருத்துகளை லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ் காண்பித்துள்ளார். தணிக்கை குழு இதுபோன்ற படங்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.  லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜை உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும். 

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு 'லியோ' படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாத நிலையில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.