பூட்டிய வீட்டில், ரத்தம் வழிய பிணமாக கிடந்த பிரபல இளம் நடிகை! அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்!

பூட்டிய வீட்டில், ரத்தம் வழிய பிணமாக கிடந்த பிரபல இளம் நடிகை! அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்!



bollywood-actress-arya-banerjee-dead

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஆர்யா பானர்ஜி. 33 வயது நிறைந்த இவர் வித்யாபாலன் நடிப்பில் வெளிவந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தி டர்ட்டி பிக்சர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் கொல்கத்தாவில் அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது மாடியில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று ஆர்யாவின் வீட்டில் பணிபுரியும் பெண் வந்து நீண்ட நேரமாக அவர் வீட்டு கதவை தட்டியுள்ளார். ஆனால் அப்பொழுது அவர் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அந்த பெண் உடனே ஆர்யாவுக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் எடுக்கவில்லை. உடனே இதுகுறித்து அந்த பெண் அக்கம்பக்கத்தினருக்கு கூறி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

aarya banerjee

 பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் ஆர்யா பானர்ஜியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு படுக்கை அறையில் ஆர்யா பிணமாக கிடந்துள்ளார். மேலும் அங்கு ஆர்யா வாந்தி எடுத்து, ரத்தம் வழிந்து தரையில் கிடந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.