பிக்பாஸ் வீட்டில் சேரனுக்கு என்ன ஆனது? புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள். - TamilSpark
TamilSpark Logo
சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் சேரனுக்கு என்ன ஆனது? புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 100 நாட்களை கொண்ட இந்த போட்டி 86 நாட்களை கடந்துவிட்ட நிலையில் போட்டி முடிவடைய இன்னும் ஓரிரு வாரங்களே மீதம் உள்ளது. 16 பிரபலங்கள் பங்கேற்றநிலையில் தற்போது 7 பேர் மட்டுமே வீட்டில் உள்ளனர்.

இந்நிலையில் இறுதி போட்டிக்கு நேரடியாக செல்லும் போட்டியாளரை தெரிவு செய்ய டிக்கெட் டு பினாலே என்ற டாஸ்க் நடந்துவருகிறது. ஒரு வாரம் நடைபெறும் இந்த டாஸ்கில் யார் அதிக மதிப்பெண் பெருகிறாரோ அவர் பிக்பாஸ் இறுதி வாரத்திற்கு நேரடியாக தேர்வாவர்.

இந்நிலையில் அதிக மார்க் பெற்று இறுதி வாரத்திற்கு செல்ல அணைத்து போட்டியாளர்களும் கடுமையாக விளையாடிவருகின்றனர். இன்றைய நிகழ்ச்சியில் டாஸ்க் விளையாடும்போது சேரனுக்கு அடிபட்டுவிட்டதுபோல. தனது முதுகில் பேண்ட் கட்டி விளையாடிவருகிறார் சேரன். 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo