சினிமா Bigg Boss வீடியோ

பிக்பாஸ் கேட்ட ஒத்த கேள்வி! கதறி கதறி அழுத சுரேஷ்! வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!

Summary:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான விறுவிறுப்பான ப்ரமோ வீடியோ வெளியாகி பெரும் ஆர்வத்தை கிளப்பியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4ல் நேற்று போட்டியாளர்கள் பாதி பேர் அரக்கர்கள், அரக்கிகளை போலவும், மீதி பேர் அரச குடும்பத்தை போலவும் உடையணிந்து கொள்ளவேண்டும். அரக்கர்கள் என்ன செய்தாலும் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் சிலையாக அமர்ந்து உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற சுவாரஸ்ய டாஸ்க் ஒன்றை கொடுத்தார் பிக்பாஸ்.

அந்த டாஸ்க் நேற்று  மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் பாதியிலேயே முடிந்தது. அதன் தொடர்ச்சி இன்று ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் இன்று இதற்கு முன்பு வெளியான ப்ரமோக்களில், நேற்று அரக்கர், அரக்கியராக இருந்தவர்கள் இன்று அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரக்கர், அரக்கியராகவும் மாறியுள்ளனர்.

மேலும் அரச குடும்பத்தை சுரேஷ்,  அரக்கியாக மாறிய சனம் ஷெட்டியை கம்பால் அடிப்பது போல உள்ளது. உடனே கொதித்தெழுந்த சனம் சுரேஷை மோசமாக கடுமையாக திட்டியுள்ளார்.

இந்நிலையில் தற்போது வெளியான மூன்றாவது ப்ரமோவில், சுரேஷ் தன்னை கன்பெஷன் ரூமிற்கு அழைக்குமாறு பிக்பாஸிடம் கேட்கிறார். அதனைத் தொடர்ந்து அவரை உள்ளே அழைத்த பிக்பாஸ், சுரேஷ் நீங்க தெரிஞ்சு செஞ்சீங்களா என கேட்கிறார். உடனே சுரேஷ் இல்லை தெரியாமல் செய்ததுதான். அனைவரும் என்னை கார்னர் செய்து மோசமாக பேசுறாங்க என கூறி கதறி கதறி அழுதுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement