சினிமா வீடியோ

டேய்..வெளியே வாடா இப்போ! சுரேஷ் செய்த காரியத்தால் கோபத்தின் உச்சிக்கே சென்ற சனம்! வைரலாகும் ரணகள வீடியோ!

Summary:

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இன்றைய நாளிற்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் உற்சாகங்கள், வாக்குவாதங்கள், சண்டைகள், என மக்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டி வருகிறது.  இந்நிலையில் பிக்பாஸ் நேற்று சுவாரஸ்யமான டாஸ்க் ஒன்றை கொடுத்தது. 

 அதன்படி போட்டியாளர்கள் பாதி பேர் அரக்கர்கள், அரக்கிகளை போலவும், மீதி பேர் அரச குடும்பத்தை போலவும் உடையணிந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அரக்கர்கள் என்ன செய்தாலும் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் சிலையாக அமர்ந்து உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். 

அந்த டாஸ்க் நேற்று பாதியிலேயே முடிவடைந்த நிலையில் அதன் தொடர்ச்சி இன்று ஒளிபரப்பாகிறது.நேற்று அரக்கர், அரக்கியராக இருந்தவர்கள் இன்று அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரக்கர், அரக்கியராகவும் மாறியுள்ளனர்.

இந்நிலையில், தற்பொழுது வெளியான இரண்டாவது ப்ரோமோவில், சுரேஷ், சனம் ஷெட்டியை கம்பால் அடிப்பது போல உள்ளது. உடனே கொதித்தெழுந்த சனம் கடுமையாக திட்டத் துவங்குகிறார். மேலும் அவர் உங்களுக்கு மூளை இல்லையா என கேட்க சுரேஷ் இல்லை என கூறிவிட்டு செல்கிறார். இதனால் மேலும் கடுப்பான சனம் டேய் வெளியே வாடா நீ இப்போ என கத்துகிறார். இதனை பொருட்படுத்தாத சுரேஷ் உள்ளே நக்கலாக சிரித்துக் கொண்டு இருந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement