சினிமா

அரக்கர்களாக மாறிய போட்டியாளர்கள்! புதிய டாஸ்கால் மீண்டும் வெடித்த மோதல்! ரணகளமான பிக்பாஸ் வீடு! வீடியோ இதோ!

Summary:

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் சீசன் 4 தொடங்கி மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் உற்சாகங்கள், வாக்குவாதங்கள், சண்டைகள், சுவாரசியங்கள் என மக்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டி வருகிறது.

அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் முதன்முதலாக பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரமோவில், பிக்பாஸ் சுவாரஸ்யமான டாஸ்க் ஒன்று கொடுத்துள்ளது. அதில் போட்டியாளர்கள் பாதி பேர் அரக்கர்கள், அரக்கிகளை போலவும், மீதி பேர் அரச குடும்பத்தை போலவும் உடையணிந்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் அரக்கர்களும், அரக்கிகளும் என்ன செய்தாலும் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் சிலையாக அமர்ந்து உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். இந்த நிலையில் வெளிவந்த இரண்டாவது ப்ரமோவில் ஓடி வரும்போது பாலாஜி சோமை இடித்துவிட அவர் கீழே விழுந்துவிடுகிறார். பின்னர் இதுகுறித்து சுரேஷ், பாலாஜியிடம் கேட்க  இருவருக்குமிடையே தகராறு ஏற்படுகிறது. இதனால் பிக்பாஸ் வீட்டில் இன்று மீண்டும் மோதல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement