
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல்நிலவு சீரியலில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெ
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல்நிலவு சீரியலில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்று பிரபலமானவர் ஷிவானி. அதனைத் தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் பாதியிலேயே அந்த தொடர்புகளை விட்டு விலகினார். மேலும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.
இந்த நிலைகள் ஷிவானி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டார். அங்கு சக போட்டியாளரான பாலாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் FREEZE டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ஷிவானியின் அம்மா அவர் பாலாவுடன் பழகுவது குறித்து தாறுமாறாக, கடுமையாக கண்டித்தார். இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்த பலரும் செம ஷாக்கானர். அதைத்தொடர்ந்து ஷிவானியும் பாலாவிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டு போட்டிகளில் கவனம் செலுத்தி நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஷிவானி தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். அந்தக் கொண்டாட்டத்தில் பிக்பாஸ் பாலா கலந்து கொண்டார். அவர் ஷிவானியின் அம்மா முன்பே அவருக்கு கேக் ஊட்டினார். பாலாஜியின் கண்ணாடியை ஷிவானியின் அம்மா போட்டுக்கொண்டு எல்லோரும் செல்பி எடுத்துள்ளனர். இந்த புகைப்படங்களை இணையத்தில் பாலா வெளியிட்ட நிலையில் அதனை கண்ட ரசிகர்கள், அப்போ அதெல்லாம் நடிப்பா.. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Advertisement
Advertisement