சினிமா

அடேங்கப்பா..என்னவொரு லுக்கு! பிக்பாஸ் ஸ்மார்ட் ஆரி சிறுவயதில் எப்படியுள்ளார் பார்த்தீர்களா! தீயாய் பரவும் புகைப்படம்!

Summary:

நடிகர் ஆரி சிறுவயதில் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் பரபரப்பாவும் விறுவிறுப்பாகவும் சென்று தற்போது 50 நாட்களுக்கு மேல் கடந்துள்ளது. இதில் மக்களுக்கு ஓரளவிற்கு பரிச்சயமான சில பிரபலங்கள் போட்டியாளராக  கலந்து கொண்டுள்ளனர். 

இவ்வாறு 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் நடிகர் ஆரி. இவர் ரெட்டை சுழி,  நெடுஞ்சாலை, மாயா, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் இவர் பல சமூக சேவைகளையும் மேற்கொண்டு வருகிறார். நடிகர் ஆரியின் மனைவி நதியா. நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த இருவருக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு  ரியா அனகாரிகா  என்ற மகள் உள்ளார். 

     

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக விளையாடி ஆரி ஏராளமான  ரசிகர்களின் ஆதரவை பெற்றுவருகிறார்.இந்நிலையில் ஆரி சிறுவயதில் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement