கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
அனைவரையும் அழவைக்க தயாராகும் பிக் பாஸ் - இன்றைய நிகழ்ச்சியில் நடக்கப்போவது என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை நாட்கள் சிறு சிறு பிரச்சனைகள் வந்தால் போட்டியாளர் அவர்களுக்குள்ளேயே சண்டை போட்டுக்கொண்டு அழுவார்கள். ஆனால் இன்று ரசிகர்களையும் சேர்த்து அழ வைக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி என எதிர்ப்பார்கப்படுகிறது.
தற்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில், ஆதரவற்ற குழந்தைகள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் போட்டியாளர்கள் அனைவருடனும் ஆடி பாடி சந்தோஷமாக இருக்கிறார்கள்.
பின், எப்படி இந்த ஹாஸ்டலுக்கு வந்தோம் என்கிற கதையை, அந்த குழந்தைகள் கூறிகிறார்கள்.
முதலில் பேசும் சிறுவன் வெகுளித்தனமாக, அம்மா இறந்துட்டாங்க, அப்பா ஓடிவிட்டார்.. என்னுடைய பெரியம்மா இங்கு வந்து சேர்த்ததாக கூறுகிறார். மற்றொரு சிறுவன் தனக்கு அப்பா அம்மா இல்லை என கூறும் காட்சி காட்டப்படுகிறது. இதை தொடர்ந்து பேசும் குழந்தை இந்த ஹாஸ்டலில் மொத்தம் 100 பேர் இருக்கிறேம், எங்க அம்மா அப்பா சண்டை போட்டு பிரிந்து விட்டதாக கூறி அழுகிறார்.
இந்த சிறுவனை சமாதன படுத்த அனைத்து போட்டியாளர்களும், அந்த சிறுவனை அரவணைத்து ஆறுதல் கூறுகிறார்கள்.
இந்த காட்சியை பார்க்கும் போது அனைவரது கண்களும் கலங்குவதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். எனவே இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி அனைவருடைய மனதையும் தொடும் விதத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.