சினிமா பிக்பாஸ்

வனிதா வீட்டு விசேஷத்திற்கு தாய் மாமனாக வந்தது யார் தெரியுமா? உற்சாகத்தில் வனிதா!

Summary:

Big boss 3 vanitha cheran

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாகவும் அனைவரது மனதையும் கவரும் வகையில் இருந்தது. அதிலும் அதில் கலந்துகொண்ட நடிகை வனிதாவை யாராலும் மறக்க முடியாது.

அந்த அளவிற்கு நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு சென்றவர் வனிதா. இவர் பிக்பாஸ் வீட்டிற்கு ரீஎன்ட்ரி கொடுத்ததும் அனைவருக்கும் ஒரு வித சந்தோஷத்தை ஏற்படுத்தியது.

பிக்பாஸ் வீட்டில் சேரன் அவர்களின் வெறியேற்றத்தின் போது தான் முதன் முறையாக கண்ணீர் விட்டு அழுதார். அதற்கு காரணம் அவரை தனது சொந்த அண்ணனாக நினைத்தார்.இந்நிலையில் தற்போது வனிதாவின் மூத்த மகள் வயதிற்கு வந்து விட்டாராம். 

அவருக்கு தாய் மாமனாக சேரன் வந்து அனைத்தையும் செய்துள்ளார். இதனை வனிதா ரத்த சொந்தங்கள் தன்னை ஒதுக்கினாலும் பிக்பாஸ் சொந்தம் தன்னை கைவிடவில்லை என மகிழ்ச்சி அடைந்துள்ளார்.


Advertisement