தனது பரம்பரை வீட்டை தானமாக கொடுத்த பிரபல பாடகர்! அதுவும் யாரிடம், எதற்காக தெரியுமா? வெளியான வீடியோ!

தனது பரம்பரை வீட்டை தானமாக கொடுத்த பிரபல பாடகர்! அதுவும் யாரிடம், எதற்காக தெரியுமா? வெளியான வீடியோ!



balasubramanian-donate-house-for-kanji-madathipathi

தமிழில் ஆன்மீக பாடல்கள், சினிமா பாடல்கள் என ஏராளமான பாடல்களை பாடி, ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு அவர்களின் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம். 

ஆந்திராவில் நெல்லூரில் பிறந்த இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மேலும் இவரது இசை திறமையை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி பெருமைபடுத்தியுள்ளது.

sp balasubramaniam

பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு  ஆந்திரா நெல்லூரில் சொந்தமாக ஓர் பரம்பரை வீடு உள்ளது. ஆனால் அவர் இப்போது சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் பாலசுப்ரமணியம் தனது பூர்வீக  வீட்டை வேதபாட சாலை அமைப்பதற்காக காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் தானமாக அளித்துள்ளார்.
முறைப்படி நடந்த இந்த நிகழ்ச்சியில் எஸ்பி பாலசுப்ரமணியம் காஞ்சி மடாதிபதிகள் முன் ஆன்மிக பாடல் ஒன்றை பாடியுள்ளார்.