பாகுபலி பட நடிகர் திடீர் கைது.! இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி சம்பவம்!!

பாகுபலி பட நடிகர் திடீர் கைது.! இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி சம்பவம்!!


bagupali movie actor arrested

தெலுங்கு தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்களில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மது பிரகாஷ். இவர் பிரபாஸ் மற்றும் ராணா நடிப்பில் வெளிவந்த பாகுபலி படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். இவரது மனைவி பாரதி. 

இந்நிலையில் சூட்டிங் சென்றுவிட்டு, வீட்டிற்கு சரியாகவே வருவதில்லை என மது பிரகாஷ் மற்றும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Bahubali

இந்நிலையில் பாரதி கடந்த சில தினங்களுக்கு முன்பு  ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மது பிரகாஷ் மீது பாரதியின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். அதில் கடந்த  2014ல் மது பிரகாஷ் மற்றும் பாரதி ஆகியோர்க்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது  15லட்சம் கொடுக்கப்பட்ட நிலையிலும், மதுபிரகாஷ் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்துள்ளார்.

Bahubali

மேலும் மது ஷூட்டிங் முடித்துவிட்டு வீட்டுக்கு லேட்டாக வருவது தொடர்பாகவும் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துவந்தது. அதனாலேயே பாரதி தற்கொலை செய்துகொண்டார்  தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மதுபிரகாஷ் மீது வழக்குபதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.