பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
ஓணம் பண்டிகையின் அழகான உடையில் நடிகை அசினின் மகள்! வைரலாகும் புகைப்படம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் அசின். எம். குமரன் சன் ஆப் மகாலக்ஷ்மி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தலைகாட்டிய இவர் கஜினி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். அதன்பின்னர் விஜய், அஜித், விக்ரம் என தமிழ் சினிமாவின் பல்வேறு நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
தமிழில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகை அசின் பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றபெறவில்லை. இதனிடையே பிரபல நிறுவனமான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ராகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அசின். இவர்களுக்கு அரின்ஸ் என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை ஓணம் கொண்டாடப்படுகிறது. இதனைமுன்னிட்டு தனது மகளின் முதல் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் என ஓணம் உடை அணிவித்து அழகான புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.