பேயாட்டம் ஆடும் பிக்பாஸ் புகழ் ஆரவ்வின் மாஸான மார்க்கெட் ராஜா ட்ரைலர் - வீடியோ உள்ளே.Arav  in market raja trailer

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் பிரபலமாகிவிட்டனர்.

இதில் கலந்து கொண்ட ஆரவ் பிக்பாஸில் வெற்றியடைந்தார். மேலும் பிக்பாஸில் இருக்கும்பொழுது ஆரவ் மற்றும் ஓவியா இருவரும் காதலித்து வந்தார்கள், இந்த காதலையும் தாண்டி இவர்கள் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

arav

இந்நிலையில் தற்போது ஆரவ் ஹுரோவாக புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். அதாவது இயக்குனர் சரண் இயக்கத்தில் ஹுரோவாக ஆரவ் மற்றும் நாசர், ராதிகா போன்ற முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ள படம் தான் மார்க்கெட் ராஜா.

தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் விரைவில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடிகர் ஆரவ் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தெரிகிறது.