சினிமா

அச்சு அசல் அப்படியே அம்மாவை உரிச்சு வைத்திருக்கும் நடிகை அஞ்சலி! இந்த போட்டோவை பார்த்து இருக்கீங்களா!!

Summary:

அச்சு அசல் அப்படியே அம்மாவை உரிச்சு வைத்திருக்கும் நடிகை அஞ்சலி! இந்த போட்டோவை பார்த்து இருக்கீங்களா!!

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதனை தொடர்ந்து அவர் அங்காடித்தெரு என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் அப்படம் அவரது திரைவாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்தது.

பின்னர் அஞ்சலி எங்கேயும் எப்போதும், இறைவி, தூங்காநகரம், மங்காத்தா, கருங்காலி தரமணி என தொடர்ந்து பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கென ஏராளமான ரசிகர்களும் உருவாகினர். அஞ்சலி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகபடுத்துவார். இந்த நிலையில் அவர் தற்போது தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் அஞ்சலி அப்படியே அவரது அம்மாவை உரித்து வைத்திருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement