இந்த புகைப்படத்தில் இருப்பவர் ஒரு திருநங்கை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா?
இந்த புகைப்படத்தில் இருப்பவர் ஒரு திருநங்கை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா?

பேரன்பு படத்தில் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமா துறையில் பிரபலமானவர் நடிகையும், திருநங்கையுமான அஞ்சலி அமீர். பேரன்பு படத்தில் நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அவரது நடிப்பு பலராலும் பாரட்டப்பட்டது.
இந்நிலையில் அஞ்சலி அமீர் நேற்று பேஸ்புக்கில் லைவ்வில் வந்து, எனது காதலர் அனஸ், என் உணர்வுகளை மதிப்பதில்லை என்றும் என் நண்பர்களிடம் பேச கூட என்னை அனுமதிப்பதில்லை. அவரைப் பிரியும் முடிவை எடுத்தால் ஆசிட் ஊற்றிக் கொல்வேன் என்று தன்னை மிரட்டுகிறார் என அழுதுகொண்டே புகார் கூறினார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசியுள்ள அஞ்சலியின் காதலர் அனஸ் கூறுகையில், அவர் நண்பர்கள் அவருக்குத் தவறான ஆலோசனைகளைச் சொல்கிறார்கள். அஞ்சலிக்கு விருப்பமில்லை என்றால் விலகிக்கொள்ளட்டும், கடந்த 2 வருடமாக நாங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தோம். அவருக்கு யாரும் ஆதரவளிக்கவில்லை என்பதால் நான் உதவியாகத்தான் இருந்தேன். என கூறியுள்ளார் .