இனி விஜய் டிவி பக்கமே போகமாட்டேன்! ஏன்னா.. உண்மையை உடைத்த தொகுப்பாளினி பாவனா!!

இனி விஜய் டிவி பக்கமே போகமாட்டேன்! ஏன்னா.. உண்மையை உடைத்த தொகுப்பாளினி பாவனா!!



anger-bhavana-talk-about-vijay-tv

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் தொகுப்பாளினி பாவனா. இவர் உச்சரிப்பு மிகுந்த பேச்சால், தனது தனித்துவம் வாய்ந்த குரலால் மக்களை பெருமளவில் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவர் சமீபகாலமாக ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

அதாவது அவர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு தொகுப்பாளினியாகவும் இருந்து வந்தார். அதுமட்டுமின்றி பாவனா விருது விழாக்கள், டாப் படங்களின் இசை வெளியீட்டு விழாவையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்  Dance Vs Dance 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Bhavana

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜய் டிவி குறித்து  கேட்டதற்கு அவர், விஜய் டிவி பக்கம் இனி போக வேண்டாம் என நினைச்சிருக்கேன். ஏன்னா அவங்க ஸ்டைலும் எனது ஸ்டைலும் இப்ப வேற ஆகிடுச்சு. அவங்க இப்பொழுது காமெடியா கொண்டு போனா மட்டுமே ஃபோகஸ் செய்யுறாங்க. எனக்கு அது அவ்வளவா வர மாட்டேங்குது. அதனால விட்டுடலாம் என கூறியுள்ளார்.