மறைந்த பிரபல தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் திருமணத்தின் போது எப்படியிருக்கார் பார்த்தீங்களா! வைரலாகும் புகைப்படம்!!

மறைந்த பிரபல தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் திருமணத்தின் போது எப்படியிருக்கார் பார்த்தீங்களா! வைரலாகும் புகைப்படம்!!


anger-ananthakannan-marriage-photo

சன் மியூசிக் சேனல் ஆரம்பமான காலத்திலேயே ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகவும் பிரபலமான தொகுப்பாளராக இருந்தவர் விஜே ஆனந்த கண்ணன். டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமில்லாமல் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளையும் மிகவும் அசத்தலாக தொகுத்து வழங்கியுள்ளார்.

மேலும் கிராமிய கலைகளின் மீது மிகுந்த பற்று கொண்ட சிங்கப்பூர் தமிழரான இவர் அங்கு தமிழர்களின் கிராமிய கலைகளை பரப்பும் வகையில் பல வித்தியாசமான கலை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். ஆனந்த கண்ணன் சிந்துபாத் உள்ளிட்ட சில சீரியல்களிலும் நடித்துள்ளார். மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார்.

ananthakannan

 ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அண்மையில் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவு அனைவரையும் பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் ஆனந்தகண்ணன் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.