சினிமா

இரட்டை ஜடை.. பள்ளி சீருடை.. வைரலாகும் அமலாபாலின் பள்ளிப்பருவ புகைப்படம்.. நீங்க பாத்துட்டீங்களா?

Summary:

தனது பள்ளி பருவ புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை அமலா பால்.

தனது பள்ளி பருவ புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை அமலா பால்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். மைனா படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அம்மணிக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது.

தளபதி விஜய்க்கு ஜோடியாக தலைவா படத்தில் நடித்த இவர் அந்த படத்தின் இயக்குனர் AL விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விக்கறது பெற்றனர். விவாகரத்து பெற்றபிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாக நடித்துவருகிறார் அமலா பால்.

சமீபத்தில் இவர் நடித்த ஆடை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அமலாபாலின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அப்படியே சிந்து சமவெளி படத்தில் அவரை பார்த்ததுபோலவே இருப்பதாக கமெண்ட் செய்துவருகின்றனர்.


Advertisement