"விடாமுயற்சி படப்பிப்பில் சமைத்து அசத்திய தல அஜித்!" ஆச்சர்யத்தில் படக்குழு..



Ajith cooking food in vidamuyarchi shooting spot

1993ம் ஆண்டு தமிழில் "அமராவதி" படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் அஜித்குமார். தொடர்ந்து பவித்ரா, ஆசை, வான்மதி, காதல் கோட்டை, உல்லாசம், அவள் வருவாளா, வாலி, அமர்க்களம், நீ வருவாய் என, முகவரி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என பல படங்களில் நடித்துள்ளார்.

Ajith

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், கடைசியாக "துணிவு" படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத் தயாரிப்பில் "விடாமுயற்சி" படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், பிரியா பவானி ஷங்கர், ரெஜினா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அசர்பைஜான் நாட்டில் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்து, தற்போது இரண்டாம் கட்டப் படப்பிப்பு தொடங்கியுள்ளது.

Ajith

ஒவ்வொரு படப்பிடிப்பின்போதும், அஜித் தன் கையாலேயே படக்குழுவினருக்கு பிரியாணி சமைத்துக்கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது வழக்கம்போல இல்லாமல், சிக்கன் கிரேவியாக அஜித் சமைத்துக் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.