ராஜ்குமார், சிவாஜி, கமல், ரஜினி, ஜெமினி உட்பட பலருடன் நடித்த, பழம்பெரும் நடிகை லீலாவதி காலமானார்..!
நந்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகர்கள் தானாம்... இப்படி மிஸ் பண்ணிட்டிங்களே!!
நந்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகர்கள் தானாம்... இப்படி மிஸ் பண்ணிட்டிங்களே!!

இயக்குனர் இமயம் பாலா இயக்கத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹூட் அடித்த திரைப்படம் தான் நந்தா. இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சூர்யா, லைலா, ராஜ்கிரண், கருணாஸ் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நந்தா படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் சூர்யாவின் திரைவாழ்க்கையில் முக்கிய பங்கை வகித்தது. ஆனால் இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சூர்யா மற்றும் ராஜ்கிரண் கிடையாதாம்.
சூர்யா நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது அஜித் என்றும், ராஜ்கிரண் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது சிவாஜி தானாம். அப்போது இருவரின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் இப்படத்தில் அவர்களால் நடிக்கமுடியாமல் போனதாக கூறப்படுகிறது.