வசூலை வாரி அள்ளும் நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.! 10 நாட்களில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா??
ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் இந்த பிரபல சீரியல் நடிகரா? வெளியான தகவலால் செம ஷாக்கில் தமிழ் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆடல், பாடல், கவர்ச்சி என்று மட்டும் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இவர் நடித்த காக்கா முட்டை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவர் நடித்த கனா மற்றும் சாமி 2 படங்களும் பெருமளவில் வெற்றி பெற்றது.
மேலும் தமிழ் சினிமாவை தாண்டி ஹிந்தி சினிமாவிலும் நடிக்க இவரை தேடி வாய்ப்புகள் வந்தன. இந்நிலையில் இயக்குனர் எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது மெய் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்த எங்க வீட்டு பிள்ளை படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இவ்வாறு ஏராளமான திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்க இடம்பிடித்த ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நடிகர் மணிகண்டன் ஆவார்.
மணிகண்டன் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான வள்ளி, கேளடி கண்மணி, அழகு மற்றும் சிவா மனசுல சக்தி உள்ளிட்ட தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.