தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
அடேங்கப்பா.. நடிகை வனிதா பிறந்தநாளை எங்கு கொண்டாடியுள்ளார் பார்த்தீங்களா!! வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் வனிதா. அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளாவார். சர்ச்சைகளுக்கு பெயர்போன வனிதா விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டில் இவரது சில செயல்கள் மற்றும் பேச்சால் ஏராளமான விமர்சனத்திற்கும் உள்ளானார். அதனைத்தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சி உள்ளிட்ட பல பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சீரியல்களில் கெஸ்ட் ரோலிலும் கலந்துகொண்டார். அதுமட்டுமின்றி தொடர்ந்து ஏராளமான பட வாய்ப்புகளும் அவருக்கு வந்தது.
இந்த நிலையில் சினிமாவில் நடித்து வரும் அவர் பிசினஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி வெற்றிகரமாக யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் வனிதா நேற்று தனது பிறந்தநாளை பாங்காங்கில் கொண்டாடியுள்ளார். சமைத்த பெரிய நண்டை தட்டில் வைத்திருக்கும் புகைப்படத்தை தனக்குத்தானே பிறந்தநாள் வாழ்த்து கூறி அவர் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.