ஒரேமாதம்.. 7 கிலோ உடல் எடையை ஒரே மாதத்தில் குறைத்த சீரியல் நடிகை; எப்படி தெரியுமா?.!

ஒரேமாதம்.. 7 கிலோ உடல் எடையை ஒரே மாதத்தில் குறைத்த சீரியல் நடிகை; எப்படி தெரியுமா?.!


  Actress Shreya Anjan Weight Loss 

 

சின்னத்திரையில் முக்கிய நடிகையாக வளர்ந்து வரும் ஸ்ரேயா அஞ்சன். அன்புடன் குஷி, அரண்மனை, நந்தினி உட்பட பல தொடர்களில் நடித்து வருகிறார். 

திருமண மன்ற சீரியலில் அவர் அறிமுகமாகி, அதில் ஜோடியாக நடித்த சித்தூர் சித் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இந்த தம்பதிகள் திருமணத்திற்கு பின்னர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், ஸ்ரேயா ஒரே மாதத்தில் 7 கிலோ எடை குறைந்துள்ளார். 

Actress Shreya Anjan

தனது உடல் எடையை குறைக்க காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த சப்ஜா விதை, தேன், பப்பாளி போன்றவற்றை எடுத்துக்கொள்வதை அவர் வழக்கமாக வைத்துள்ளார். புதினா போன்ற கீரை வகைகளையும் சாப்பிட்டு வருகிறார். 

உணவில் அதிகமாக காய்கறிகளை சேர்த்து, இரவில் சுண்டல் ஆகியவற்றை எடுத்துக் கொண்டுள்ளார். அதேபோல காலையில் 20 நிமிடம் உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டு ஒரே மாதத்தில் 7 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார்.