சினிமா

நான் திருமணம் செஞ்சுக்கிட்டதே அதற்காகத்தான்! உண்மையை போட்டுடைத்த கபாலி பட நடிகை! செம ஷாக்கில் ரசிகர்கள்!

Summary:

விசா பெறுவதற்காகவே லண்டனை சேர்ந்தவரை தான் திருமணம் செய்து கொண்டதாக கபாலி பட நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் டோனி,ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து கபாலி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் ராதிகா ஆப்தே. இவர் பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். 

மேலும் எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது சமூக பிரச்சினைகளுக்கு எதிராகவும் குரல் எழுப்பி வருகிறார். இந்நிலையில் ராதிகா ஆப்தே 2012 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இசையமைப்பாளரான பெனடிக்ட் டெய்லர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த அவரிடம், திருமணம் குறித்து கேட்டநிலையில், எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை கிடையாது. மேலும் விசா வாங்குவது பெரிய பிரச்சினையாக இருந்தது. இந்நிலையில் லண்டனை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டால் விசா எளிதில் பெறலாம் என தெரிந்தது. அதனாலேயே திருமணம் செய்து கொண்டேன். அது நியாயம் இல்லை. திருமணத்தில் எந்த ஒரு எல்லையும் இருக்க கூடாது என அவர் கூறியுள்ளார்.


Advertisement