போட்டு தாக்கு!! பீஸ்ட் பட நாயகி தனி ஆளாய் பீச்சில் போட்ட ஆட்டத்தை பாத்தீங்களா...! அதுவும் என்ன பாட்டுக்கு தெரியுமா..?

போட்டு தாக்கு...பீஸ்ட் பட நாயகி தனி ஆளாய் பீச்சில் போட்ட ஆட்டத்தை பாத்தீங்களா...! அதுவும் என்ன பாட்டுக்கு தெரியுமா..?


actress-poojahegde-dance-video

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இவருக்கென ஏராளமான  ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் பூஜா ஹெக்டே தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த  படத்தின் அரபிக்குத்து பாடல் சமீபத்தில் வெளியாகி மாபெறும் வெற்றிபெற்றது. மேலும், பாடல் வெளியாகி 24 மணிநேரத்தில் 25+ மில்லியன் பார்வைகளை பெற்று தென்னிந்தியளவில் அதிக பார்வைகளை குவித்த பாடலாக அரபிக் குத்து சாதனை படைத்துள்ளது.

actress

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் பூஜா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவார்.  தற்போது அவர் மாலதீவிற்கு சுற்றுலா சென்ற நிலையில், அங்கு பீஸ்ட் பட பாடலுக்கு  குத்தாட்டம் போட்ட வீடியோவை  இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ  அந்த வீடியோ...