முடிலேடா சாமி...தலையில் கை வைத்து கவலையை பகிர்ந்த நடிகை நிவேதா தாமஸ்ஸின் புகைப்படம்!

நடிகை நிவேதா தாமஸ் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் குழந்தை நடச்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் நடிகை நிவேதா தாமஸ். தமிழ் சினிமாவில் நவீன சரஸ்வதி சபதம் படத்தில் நாயகியாக நடித்த இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்ணனி நாயகிகளில் ஒருவராக உள்ளார்.
தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தார். தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மகளாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் நிவேதா தாமஸ்.
தற்போது கொரோனா சமயத்தில் வீட்டில் ஓய்வெடுத்துவரும் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவருகிறார். அந்தவகையில் அவர் தற்போது முடில்லடா சாமி என பதிவிட்டு கியூட் சிரிப்புடன் தலையில் கைவைத்தப்படி உள்ள புகைப்படம் ஒற்றை இன்ஸ்ட்ராகிராம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.