வாவ். கொழு கொழு கியூட்டி நித்யாமேனன் 10 வயதில் எப்படியிருக்காரு பார்த்தீங்களா!! வைரலாகும் அழகிய வீடியோ!!

வாவ். கொழு கொழு கியூட்டி நித்யாமேனன் 10 வயதில் எப்படியிருக்காரு பார்த்தீங்களா!! வைரலாகும் அழகிய வீடியோ!!


Actress nithya menan childhood video viral

தமிழ் சினிமாவில் 180 என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். கொழுகொழுவென கியூட்டாக இருக்கும் அவர் மக்களிடையே நன்கு பிரபலமானார். நடிகை நித்யா மேனன் விஜய்யுடன் மெர்சல், விக்ரமுடன் இருமுகன், காஞ்சனா 2, துல்கர் சல்மானுடன் ஓகே கண்மணி மற்றும் சைக்கோ போன்ற சூப்பர் ஹிட் படங்களில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.  நடிகை நித்யா மேனன் நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அப்படத்தில் நித்யா மேனனின் நடிப்பு இளைஞர்கள் மனதைக் கொள்ளை கொண்டது.

இந்த நிலையில் தற்போது நடிகை நித்யா மேனனின் 10 வயது வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது அவர் கடந்த 1988ஆம் ஆண்டு தனது 10 வயதில் the monkey who knew too much  என்ற படத்தில் நடிகை தபுவுக்கு தங்கையாக நடித்துள்ளாராம். அந்த வீடியோ வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் நித்யா மேனன் கியூட்டாக இருப்பதாக கூறி வருகின்றனர்.