தாமிரபரணி பானுவா இது?.. குழந்தையுடன் அம்மாவாக பெருமைப்படும் நடிகை.. வைரல் கிளிக்ஸ் இதோ.!



actress-mukta-banu-latest-pics-with-daughter

 

கேரளாவில் பிறந்து மலையாள நடிகையாக திரையில் அறிமுகமான பிரபல நடிகை முக்தா பானு. இவர் நடிகர் விஷாலுடன் தாமிரபரணி படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பின்னர் இவர் தமிழக மக்களிடம் புகழ்பெற்ற நடிகையாக இருந்து வந்தார். 

மலையாள திரைப்படங்களில் பெரும்பாலும் நடித்துள்ள இவர், தமிழில் அழகர் மலை, சட்டப்படி குற்றம், தேசிங்கு ராஜா, மூன்று பேர் மூன்று காதல், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, வலிமை, பாம்பு சட்டை உட்பட பல படங்களில் நடித்துள்ளார். 

Actress Mukta Banu

கடந்த 2015ம் ஆண்டு ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வரும் நடிகைக்கு ஒரு குழந்தையும் இருக்கிறார். குடும்ப பொறுப்புகளை கவனித்தாலும், அவ்வப்போது திரைப்படங்களில் தனக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடித்தும் வருகிறார். 

மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தாமிரபரணி படத்தில் தாலியே தேவையில்லை என்ற பாடலின் வாயிலாக பல இளசுகளின் மனதை கொள்ளைகொண்ட பானு, தனது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.