சினிமா

பிரபல சின்னத்திரை நடிகையின் காதலன் தீக்குளித்து தற்கொலை...! காரணம் என்ன?

Summary:

actress-lover-suicide-in-chennai

கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையத்திற்கு எதிராக அதனை மூட சொல்லி போராட்டம் நடத்தப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் அந்த ஸ்டெர்லைட் ஆலையம் மூடப்பட்டது. அந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதால் போலீசார் நடத்திய கொடூர துப்பாக்கி சூட்டில் 13 அப்பாவிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்த சமயத்தில் துப்பாக்கி சூடு நடந்தபோது சின்னத்திரை நடிகை நிலானி என்பவர் இணையத்தில் ஒரு வீடியோ பதிவு மிகவும் குமுறலாக வெளியிட்டார். அவர் அந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியிடும்போது போலீஸ் சீருடை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
அதனால் நடிகரை நிலானி மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து நடிகை நிலானியை கைது செய்தார்கள். 

காந்தி லலித்குமார் என்பவரும் நடிகை நிலானியும் பல வருடங்கள் காதலித்து வந்தார்கள்.  இந்நிலையில், நிலானியின் காதலன் காந்தி லலித்குமார் நடிகை நிலானியின் கைது காரணமாக பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முன்னதாக நடிகை நிலானி காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி தகராறு செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காந்தி லலித்குமார் எதனால் தீக்குளித்தார் என்பது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement