திடீர் மாரடைப்பால் உயிரிழந்த பிரபல காமெடி நடிகர்! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!



actress-little-john-dead

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அல்லி நாயக்கன்பாளையம் என்ற பகுதியை சேர்ந்தவர் தனசேகரன். தமிழில் சில படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ள இவரை அனைவரும் லிட்டில் ஜான் என அழைத்து வருகின்றனர். 43 வயது நிறைந்த இவர் 3 அடி  உயரம் கொண்டவர்.

லிட்டில் ஜான் வெங்காயம், ஐம்புலன் உள்பட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். மேலும் அதுமட்டுமின்றி அவர் கிராமங்களில் திருவிழாக்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வந்துள்ளார். அவ்வாறு அவர் நேற்று திருச்செங்கோடு அருகே கோவில் திருவிழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியை முடித்து விட்டு வீட்டில் தூங்க சென்றுள்ளார். பின் மறுநாள் காலை வெகுநேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை.

Little john

இந்நிலையில் சந்தேகமடைந்த அவரது அவரது குடும்பத்தினர்கள் அறைக்கு சென்று பார்த்தபோது வாயிலும் மூக்கிலும் ரத்தம் வழிந்த நிலையில் லிட்டில் ஜான் கிடந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றபோது நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.